January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு!

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, ஜனாதிபதி செயலாளரினால் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில், 2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் குறித்த செயலணி அமைக்கப்பட்டது.

இந்த செயலணியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடையவிருந்த நிலையில், அதன் பதவிக் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சகல மாகாணங்களையும் உள்ளடக்கிய பொது மக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளவதற்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் என்பதனாலேயே பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.