நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றுமொரு வழக்கில் இருந்து கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பஸில் ராஜபக்ஷ பதவி வகித்த போது திவிநெகும திணைக்களத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான பணிக்கொடைப் பணத்தை முறையற்ற வகையில் கையாண்டுள்ளதாக தெரிவித்து கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, இன்றைய தினம் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் திவிநெகும நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வேறு வழக்கொன்றில் இருந்தும் பஸில் ராஜபக்ஷ விடுதலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.