ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கும் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் இலங்கை விவகாரம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை இனியும் தாமதப்படுத்தாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்காக ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அறிக்கையிடுவதற்கான ஐநாவின் அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணி அபகரிப்பு சம்பவங்கள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.