January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு”: மட்டக்களப்பில் கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

தமிழரசு கட்சியின் வடகிழக்கு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மறை.மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் இந்து, இஸ்லாமிய மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இலங்கை ஆசிரியர் சங்கம், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் உட்பட பல்வேறு பொது அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தனர்.