வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கான கொவிட் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளில் தளர்வுகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் பிசிஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்து கொள்ள அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அறிவித்தலுக்கமைய, குறைந்தது இரண்டு தடுப்பூசிகளையாவது பெற்றவர்கள் பூரண தடுப்பூசிகளை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
அத்துடன் 8 வயது அல்லது அதனிலும் குறைந்த வயதுடையவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றிருந்தால் அவர்களும் பூரண தடுப்பூசியை பெற்றவர்களாக கருதப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 12 வயதுக்கு மேற்பட்டோர் முழுமையான தடுப்பூசியை பெற்றிருக்காவிட்டால் அவர்கள் இலங்கை வரும் போது, 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட பீசீஆர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.