June 11, 2025 6:23:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின் கட்டணத்தை அதிகரிக்க யோசனை!

Electricity Power Common Image

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை ஆராய்ந்து வருகின்றது.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினூடாக இது தொடர்பான யோசனை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், மின் உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளதால், அதனை சமப்படுத்தும் நோக்குடன் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது மின் அலகு ஒன்றுக்கு 16 ரூபா அறவிடப்படுகிறது. எனினும், ஒரு அலகு மின்னுற்பத்திற்கு அதனை விட அதிக செலவு ஏற்படுவதாகவும், இதனால் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை கூறியுள்ளது.