January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் டக்சன் புஸ்லாஸ் காலமானார்!

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில் விளையாடிய மன்னாரைச் சேர்ந்த டக்சன், புஸ்லாஸ் உயிரிழந்துள்ளார்.

மாலைதீவில் நடைபெற்ற தொழில்சார் கழக மட்டப் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த போது இவர் அகால மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார், புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர், யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழகத்திலும், இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியிலும் சிறந்த வீரராக விளங்கினார்.

இதேவேளை கடந்த ஆண்டு இடம்பெற்ற எஸ்.ஏ.எப்.எப் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டிருந்தார்.

டக்சன் புஸ்லாஸின் மரணம் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.