யுக்ரைனில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
அவர்களை அங்கிருந்து போலந்து ஊடாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை எல்லைப் பகுதிகளுக்கு அறிவித்துள்ளதாக துருக்கி, ஜோர்ஜியா மற்றும் யுக்ரைனுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
14 மாணவர்கள் உள்ளிட்ட 76 இலங்கையர்கள் யுக்ரைனில் வசித்த நிலையில், அவர்களில் 8 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது யுக்ரைனில் வான் மார்க்கங்கள் மூடப்பட்டுள்ளதால், அங்குள்ள இலங்கையர்கள் போலந்து சென்று அங்கிருந்து இலங்கை வர முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் துருக்கியில் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அங்குள் இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் திரப்பட்டு வருகின்றன.