இலங்கையில் நிலவும் டீசல் நெருக்கடி காரணமாக பஸ் போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அலுவலக நேரங்களில் மாத்திரம் பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு ஆராய்ந்து வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை டீசல் பற்றாக்குறையால் தூர இடங்களுக்கான பஸ் சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியர் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் தற்போது 50 வீதமான பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.