சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீரர்கள் இருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
73 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இந்திக திசாநாயக்க தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
இவர் மொத்தமாக 278 கிலோகிராம் எடையை தூக்கியுள்ளார்.
இதேவேளை 67 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட மற்றுமொரு இலங்கையரான சதுரங்க லக்மால் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.