January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘லங்கா ஐஓசி’ எரிபொருள் விலைகளை அதிகரித்தது!

லங்கா ஐஓசி நிறுவனம் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி பெப்ரவரி 25 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இலங்கையில் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்புக்கமை ஒரு லீட்டர் பெட்ரொலின் விலை 20 ரூபாவினாலும், ஒரு லீட்டர் டீசலின் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 6 ஆம் திகதி ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்த நிலையிலேயே மீண்டும் நேற்று முதல் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எனினும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை.