January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்றத்திற்குள் டோர்ச் லைட்டுகள்: விசாரணைக்கு உத்தரவு!

பாராளுமன்றத்திற்குள் டோர்ச் லைட்டுகள் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கவுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதற்கு எதிராக வியாழக்கிழமை சபையில் டோர்ச் லைட்டுகளுடன் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படாத பொருட்களை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்துள்ளதாக ஆளும்கட்சியினர் தெரிவித்ததுடன், இது பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றும் கூறினர்.

இந்நிலையில் இன்றைய தினம் பாராளுமன்றம் கூடியபோது, அது தொடர்பில் அறிவித்த சபாநாயகர், குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.