January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைனில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை!

யுக்ரைனில் நிலவும் நிலைமையை கருத்திற்கொண்டு அங்கு வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் யுக்ரைனில் இருக்கும் இலங்கையர்கள் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமை +90 534 456 94 98 அல்லது +90 312 427 10 32 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது slemb.ankara@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ தொடர்பு கொள்ளுமாறு யுக்ரைனில் உள்ள இலங்கையர்களை வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.