இலங்கையில் அமுல்படுத்தப்படும் மின்வெட்டுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியவேளையில், டோர்ச் லைட்டுகளுடன் சபைக்குள் சென்ற ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பாராளுமன்றத்திற்குள் கொண்டு வர அனுமதிக்கப்படாத பொருட்களை இவர்கள் எப்படி கொண்டு வந்தார்கள் என்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சபை முதல்வரான அமைச்சர் தினேஸ் குணவர்தன, சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இவ்வேளையில் சபையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு சபையை ஒத்தி வைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.