January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தமிழ் எம்.பிக்கள் போராட்டம்!

காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று காலை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் இதில் கலந்துகொண்டார்.

மகாவலி தொல்பொருள், வன இலாகா மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு எனும் போர்வையில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

This slideshow requires JavaScript.