January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவில் 13 அதிகாரிகளுக்கு கொரோனா

கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த 13 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரிவின் உணவகத்தில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு சில தினங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருந்தது.

இதனையடுத்து, அவருடன் தொடர்புகளை வைத்திருந்த 20 அதிகாரிகளுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, அவர்களில் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாக கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று பரவியமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவைச் சேர்ந்த சிலரும் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவில் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களிடையே அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.