March 15, 2025 21:47:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேர அட்டவணை

Electricity Power Common Image

இலங்கை முழுவதும் இன்றைய தினத்தில் நான்கரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாடு முழுவதும் பிரதேசங்கள் A, B, C மற்றும் P, Q, R, S, T, U, V, W என பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு பகல் நேரத்திலும் மற்றும் இரவு நேரத்திலும் இரண்டு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாகவே மின்வெட்டுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவீத்துள்ளது.

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேர அட்டவணையை இந்த இணைப்பில் பார்வையிடலாம்