January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”விசேட பொருட்கள், சேவை வரி சட்டமூலத்தில் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது”

பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள விசேட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விசேட வரி சட்டமூலத்தில் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி அந்தச் சரத்துக்களை நிறைவேற்ற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுக்கு மேலதிகமாக, பொதுமக்கள் அபிப்பிராயத்தை பெறுதல் அவசியம் என சபாநாயகர் மகிந்த யாப்பா யாப்பா அபேவர்தன, சபையில் அறிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு இன்று காலை அறிவிக்கும் போதே சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.