January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ், சிங்கள மொழிகளைக் கற்கும் அமெரிக்கத் தூதுவர்

புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சுங், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வமாக உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய மொழிகளை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதாகவும், தமிழ் – சிங்கள மொழிகளை கற்றுக் கொள்வதன் மூலம் தொடர்பாடல் தேவை மட்டும் பூர்த்தியாகப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள அவர்,  இலங்கையின் வரலாறு மற்றும் கலாசாரம் பற்றியும் பல்வேறு விடயங்களைக் கற்றுக்கொள்ள இந்த மொழி கற்கை உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அவர், புதிய மொழிகளை கற்றுக்கொள்ளும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.