January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”யுக்ரைனுக்கு அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்”: இலங்கை வெளிவிவகார அமைச்சு

யுக்ரைனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யுக்ரைனில் வசிக்கும் பதினான்கு மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யுக்ரைனில் உள்ள பதினான்கு இலங்கை மாணவர்களில் ஆறு பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம் எஞ்சிய எட்டு மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் யுக்ரைனில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளும் அவதானத்துடன் செயற்படுமாறும், அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் வெளிநாட்டு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் யுக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதை தற்போது தவிர்த்துக் கொள்ளுமாறு அனைத்து இலங்கை பிரஜைகளையும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.