எரிபொருள் மீதான வரி நீக்கப்படாவிட்டால் அதன் விலைகளை அதிகரிக்க நேரிடும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் எரிபொருளுக்கான வரியை நிதி அமைச்சு நீக்க வேண்டும் என்றும், அதனை நீக்கினால் நஷ்டத்தில் இருந்து பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஓரளவுக்கு விடுபடும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் வரியை நீக்காவிட்டால் ஏற்படக் கூடிய நஷ்டத்தை ஈடு செய்வதற்காக டீசல் லீட்டர் ஒன்றை 52 ரூபாவினாலும், பெட்ரோல் லீட்டர் ஒன்றை 19 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும் எனவும் அமைச்சர் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி எவ்வேளையிலும் விலைகள் அதிகரிக்கப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.