கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் இந்திய பக்தர்களும் அனுமதி வழங்கப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பில் ஜனவரி 26 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திருவிழாவின் போது இலங்கை பக்தர்கள் 500 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் தமிழக முதல்வரின் பிரதிநிதியொருவருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியப் போது இந்திய பக்தர்களுக்கும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.
எனினும் பின்னர் எவருக்கும் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இலங்கை, இந்திய பக்தர்கள் அனைவருக்கும் கொவிட் சுகாதார ஒழுங்குவிதிகளுடன் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.