January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வடக்கு, கிழக்கு மக்களுக்கு நான் என்றும் நன்றியுடையவன்”

வடக்கு , கிழக்கு தமிழ் மக்களுக்கு எனது நன்றி கடன் என்றும் இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சுதந்திர கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெல்ல வைப்பதற்கு வடக்கு மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள்.அந்த நன்றிக் கடனுக்காகவே நான் எனது ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வட பகுதிக்கு அதிக தடவைகள் வருகை தந்து பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து இருந்தேன் என அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், அதனை பார்த்து தான் பூரிப்படைந்தாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.