January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கூட்டத் தொடர் ஆரம்பிக்க முன்னர் இலங்கை பதிலளிக்கும்!

ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 49 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னர் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் இலங்கை பதிலளிக்கவுள்ளது.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த வாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் அவதானங்கள் மற்றும் பதிலுக்காக சமர்பிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பேரவையில் வெளியாவதற்கு முன்னரே இலங்கை அதற்கான தனது பதிலை பகிரங்கப்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என்றும், இதனை பூரணப்படுத்துவதற்கு இன்னும் காலம் தேவையாக உள்ளது என்றும் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.