January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூரில் மைத்திரிபால சிறிசேன வழிபாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

இதன்போது நல்லூர் ஆலயத்திற்குச் சென்று விசேட வழிபாடுகளை மேற்கொண்ட அவர் பின்னர் ஆரியகுளம் நாகவிகாரைக்குச் சென்று வழிபட்டார்.

அவருடன் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க, அங்கஜன் ராமநாதன் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலரும் பங்கேற்று இருந்தனர்.