January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச நிறுவனங்களில் எரிபொருள், மின்சார பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடு!

Electricity Power Common Image

இலங்கையில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் அரச நிறுவனங்களுக்கு ஆலோசனைக் கோவையொன்றை விநியோகிக்க அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கமைய அரச நிறுவனங்களில் குளிரூட்டிகள் மற்றும் தேவையற்ற மின் விளக்குகளின் பயன்பாட்டை இயன்றளவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி

இதேவேளை, அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக அரச வாகனங்களுக்கான எரிபொருளை பயன்படுத்தாது இருப்பதற்கும் அரச நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த ஆலோசனைக் கோவை வெளியிடப்படவுள்ளது.