January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய தலைவராக எஸ்.ஸ்ரீகஜன் (வீரகேசரி) தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், செயலாளராக கே.ஜெயந்திரன் (தினக்குரல்) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும் இன்று முற்பகல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் கலாவினோதன் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது ஒன்றியத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது.

அதன்படி புதிய தலைவராக எஸ்.ஸ்ரீகஜனும், செயலாளராக கே.ஜெயந்திரனும், உபதலைவர்களாக லியோ நிரோஷ தர்ஷனும் தர்மினி பத்மநாதனும் உப செயலாளராக சு.சிவசண்முகநாதனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை பொருளாளராக ப.விக்னேஸ்வரன், உப பொருளாளராக எஸ் வாஸ் கூஞ்ஞை ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் ஒன்றியத்தின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஆர். சிவராஜா , எஸ். அனந்த பால கிட்ணர் , என். ஜெயகாந்தன் , வீ.பிரியதர்ஷன் , ஆர். சேதுராமன் , கி. லக்ஸ்மன் சிசில் , பிரியங்கா சந்திரசேகரம் , கே.ஹரேந்திரன் , கே. பிரசன்னகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும் வடமாகாண இணைப்பாளராக கணபதி சர்வானந்தா, கிழக்கு மாகாண இணைப்பாளராக எஸ். சரவணன் மற்றும் மலையக இணைப்பாளராக சிவலிங்கம் சிவகுமாரன் ஆகியோரும் ஒன்றியத்தின் இணை இணைப்பாளராக தர்மினி பத்மநாதனும் தெரிவு செய்யப்பட்டனர்.