January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டுப் படகுடன் இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் மேலும் 6 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டுப் படகொன்றில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது படகுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், காரைநகர் – கோவளம் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை இவர்கள் கைதாகியுள்ளனர்.
இந்த மீனவர்கள் தமிழ்நாடு நாகபட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பெப்ரவரி மாதத்தில் 29 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.