நாடு முழுவதும் இன்று முதல் இரண்டு கட்டங்களாக மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி பிற்பகல் 2.30 முதல் மாலை 6.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலத்திற்கும், மாலை 6.30 தொடக்கம் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 45 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாடு முழுவதும் A,B,C,D என நான்கு வலயங்களாக பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி நிலைமையால் அனல் மின்நிலையங்கள் சில இயங்க முடியாத நிலையில் இருப்பதால் சுமார் 600 மெகாவொட் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இருந்து இல்லாமல் போகக் கூடிய நிலைமை இருப்பதாகவும் இதனாலேயே மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.