January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ஹேமசிறி, பூஜித விடுதலை!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னரே புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியிருந்த போதும், அதனை தடுக்கத் தவறியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அப்போதிருந்த பாதுகாப்பு செயலாளரான ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு கொழும்பு, விசேட மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் குற்றச்சாட்டுகளில் இவர்களை விடுதலை செய்வதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.