இலங்கையில் டொலரின் பெறுமதி 300 ரூபாவை எட்டலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தற்போது டொலரின் உண்மை பெறுமதி 250 ரூபாவை தாண்டியுள்ள நிலையில் இது வெகுவிரைவில் 275 ரூபாவாக உயரும் எனவும், இந்த நிலைமை தொடர்ந்தால் இந்த வருடத்திற்குள் அது 300 ரூபாவை நெருங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழுள்ளவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தால் உயர்வடைந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் உயரும் என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார நிலவரம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டில் தேசிய வளமாக இளைஞர்களே இருக்கின்றனர் என்றும் இவர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக திட்டமிடல்களுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.