இலங்கையில் பதிவாகும் மரணங்களின் போது கொவிட் தொற்றை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை அவசியமில்லை என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியசாலை அல்லது வைத்தியசாலை அல்லாத இடத்தில் பதிவாகும் அனைத்து மரணங்களின் போதும் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனினும் மரண பரிசோதனையை நடத்தும் சட்ட வைத்திய அதிகாரி பரிந்துரைக்கும் சந்தர்ப்பங்களில் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அந்த சுற்றுநிருபத்தில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை பிசிஆர் பரிசோதனையின் போது உயிரிழந்த நபருக்கு தொற்று இருப்பது உறுதியானால், தற்போதைய சுகாதார ஒழுங்குவிதிகளுக்கமையே இறுதிக் கிரியைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் சுகாதார பணிப்பாளர் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் கூறப்பட்டுளளது.