
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வஜன நீதி அமைப்பு மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி ஆகியன இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், உள்ளூராட்சி உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு அது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரும் கையெழுத்து போராட்டம் கடந்த வாரம் முல்லைத்தீவில் ஆரம்பமானது.