பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தும் சட்ட மூலத்திற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த சட்ட மூலத்தில் சில விடயங்கள் இலங்கை அரசியலமைப்பின் சில சரத்துக்களுக்கு முரணானது என்று அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
இதன்படி உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ள அம்பிகா சற்குணநாதன், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொதுசன வாக்கெடுப்பு குறித்த திருத்தங்களை நிறைவேற்ற முடியாது என்று அறிவிக்குமாறு நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இதேவேளை குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்தூவினாலும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.