January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு”: கொழும்பில் கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிக் கொள்ளுமாறு வலியுறுத்தி கையெழுத்து பெறும் போரட்டமொன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.

சர்வஜன நீதி அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காலை 11 மணி முதல் பிற்பல் 1 மணி வரையில் கையெழுத்து பெற்றுக்கொள்ளும் போராட்டம் நடைபெற்றது.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.