பெருந்தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண விலையில் மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மாவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி அமைச்சர் அவர்களால் ‘பொதுமக்கள் முகங்கொடுப்பதற்கு நேரிட்டுள்ள பொருளாதார சிரமங்களைக் குறைப்பதற்கான ‘முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல்’ எனும் தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்திற்கான 2022 ஜனவரி 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த முன்மொழிவுகளில் தோட்டத் தொழிலாளர்களின் குழும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் வழங்குதல் தொடர்பான யோசனை வர்த்தக அமைச்சரின் தலைமையிலான குழு கவனத்தில் கொண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது.
அந்த பரிந்துரைகளின் பிரகாரம் அடையாளங் காணப்பட்டுள்ள 115,867 குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மாவை சலுகை விலையில் வழங்குவதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.