இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி மூன்று நாடுகளுடன் கலந்துரையாடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் தலைமையில் அமைச்சரவை உபகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மூலப் பொருட்கள் மற்றும் கைத் தொழில் பொருட்களை இறக்குமதி செய்தவற்கான மாற்று முறைகளை அடையாளம் காணும் வகையில் இந்த உபக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி சீனக் குடியரசுடன் கலந்துரையாடுவதற்காக கைத்தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கியதாகவும், ஜப்பானுடன் கலந்துரையாடுவதற்காக சுகாதார அமைச்சர், வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஆகியோர உள்ளடக்கியதாகவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத்தியகிழக்கு நாடுகளுடன் கலந்துரையாடுவதற்காக இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு மற்றும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கியதாக குழு அமைக்கப்பட்டுள்ளது.