
இலங்கையின் 18 ஆவது விமானப் படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2019 மே மாதம் 29 ஆம் திகதி முதல் விமானப் படை தளபதியாக பதவி வகித்த சுமங்கள டயஸ் ஓய்வு பெறும் நிலையிலேயே அந்தப் பதவிக்கு சுதர்ஷன பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஓய்வுபெறும் விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்திருந்தார்.