சிவில் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புக்களில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை பிரதேசத்தில் வைத்து இன்றையை தினம் செஹான் மாலக கமகே, கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குரிய பல்வேறு கருத்துக்களை இவர் வெளியிட்டிருந்தார்.