யுக்ரைனில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
யுக்ரைனை எவ்வேளையிலும் ரஷ்யா ஆக்கிரமிக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாடுகள் பல யுக்ரைனில் இருக்கும் தமது நாட்டு பிரஜைகளை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் யுக்ரைனில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும், அவர்கள் அங்கு எவ்வித பிரச்சனைகளும் இன்றி அங்கு தங்கியிருப்பதாவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
யுக்ரைனில் 40 இலங்கையர்கள் வசித்து வருவதுடன், அவர்களில் 7 பேர் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு இலங்கை தூதரகம் இல்லை. எனினும் துருக்கி அன்காராவில் உள்ள தூதரகம் ஊடாக யுக்ரையின் உள்ளவர்களுக்கு சேவைகள் வழங்கப்படுவதாகவும், அங்கு அவசர நிலைமை ஏற்படுமாக இருந்தால் அவர்களை உடனடியாக மீட்கக் கூடிய வகையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.