November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீளாய்வுக்காக இலங்கையிடம் கையளிக்கப்படும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட்டின் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான எழுத்து மூலமான அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த அறிக்கை தொடர்பான அவதானங்கள், கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்செலெட், அந்த அறிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கிடைத்ததும் இதற்கான பதிலை வழங்குவதற்கு 18 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதால் இம்முறை இந்த விடயம் கடினமானதாக இருக்காது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.