January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருளுக்கு விலைச் சூத்திரம்!

எரிபொருளுக்கான விலைச் சூத்திரம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த சூத்திரத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வடைந்து வரும் நிலையில், இலங்கையிலுள்ள இந்தியன் ஒயில் கம்பனி கடந்த வாரத்தில் எரிபொருள் விலைகளை அதிகரித்தது.

எனினும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நிதி அமைச்சு அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையிலேயே அதற்கான விலைச் சூத்திரத்தை தயாரித்து அமைச்சரவையில் சமர்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.