January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!

மின்சாரம் உள்ளிட்ட சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மின்சார விநியோகம், வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள், நோயாளர் பராமரிப்பு சேவைகள் மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து அவசியமான சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

சுகாதார துறை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலையிலேயே ஜனாதிபதி இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.