January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

கொழும்பு – மொரட்டுவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கும் குற்றக் கும்பலை சேர்ந்த ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் பிரபல குற்றக் கும்பலை சேர்ந்த ‘அபா’ என்றழைக்கப்படும் சமீர சம்பத் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொரட்டுவ, மோதர – ஏகொட உயன பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றின் போது, குற்றக் கும்பல் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன்போது பதிலுக்கு அதிரடிப்படையினர் நடத்திய சூட்டில் குறித்த நபர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

உயிரிழந்த நபர் துபாயில் வசிக்கும் பாணந்துரையை சேர்ந்த குற்றக் கும்பல் முக்கியஸ்தர் சாலிந்த என்ற நபருடன் நெருக்கமான தொடர்புகளில் இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.