June 15, 2025 16:19:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் நியமனம்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக ஜூலி சங் நியமிக்கப்பட்டுள்ளார்.

வொஷிங்கடனில், அமெரிக்காவின் துணை வெளியுறவு செயலாளர் முன்னிலையில் பெப்ரவரி 10 ஆம் திகதி இவர் பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் சியோலில் பிறந்த ஜூலி சுங், கலிபோர்னியா சான் டியாகோ மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளை பயின்றுள்ளார்.

இதற்கு முன்னர் இவர், அமெரிக்க வெளியுறவு ஆலோசகராகவும், இராஜாங்க திணைக்களத்தின் பதில் செயலாளராகவும் கடமையாற்றி வந்தார்.

அத்துடன் கம்போடியா, தாய்லாந்து, இரான், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இந்நிலையில் ஜூலி ஜியூன் சுங்கை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவராக நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்திருந்த நிலையில், அதற்கு செனட் சபை அனுமதி வழங்கியிருந்தது.

இதன்படி இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதுவராக 2018 நவம்பர் முதல் பணியாற்றி வந்த அலைனா டெப்லிஸ் பதவியில் இருந்து விடைபெற்றுள்ளார். .