January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீன்பிடிப் படகுகள் இலங்கையில் ஏலம்: இந்தியத் தூதரகம் அறிக்கை!

இந்திய மீன்பிடிப் படகுகளை இலங்கையில் ஏலம்விடும் செயற்பாடுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தள்ளது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இலங்கையினால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவப் படகுகளை ஏலம் விடும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்த விடயம் குறித்து வெளியான பல்வேறு அறிக்கைகள் மற்றும் செய்திகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒன்று ஏற்கனவே உள்ளது என உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

இந்த புரிந்துணர்வுக்கு அமைவாக இலங்கையில், இயக்க முடியாத நிலையிலுள்ள இந்திய மீன்பிடி படகுகளை அகற்றுவது குறித்த தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கைக்கான பயணமொன்றை மேற்கொள்ளவிருந்தனர் எனவும், இலங்கை அரசாங்கத்திடம் இதற்கு தேவையான அனுமதியை உயர்ஸ்தானிகராலயம் மீண்டும் கோரியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.