
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு சில அறிவித்தல்களை விடுத்துள்ளது.
இலங்கையில் பங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
பெல்ஜியம் – பிரசல்ஸில் நடைபெற்ற இலங்கையின் கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டத்தின் பின்னர் விடுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் இது தொடர்பில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டினை மேலும் மட்டுப்படுத்திக்கொள்ளவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள விடயங்களில் அத்தியாவசியமான திருத்தங்கள் உள்ளடக்கப்படவில்லை எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச தரங்களுக்கு அமைய இந்த திருத்தங்களை மேற்கொள்ளப்படுவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளனர்.