January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியப் பிரதமர் இலங்கை வரவுள்ளதாக தகவல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதமளவில் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு வரவுள்ளதாகவே கூறப்படுகின்றது.

இதேவேளை இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாடு திரும்பியுள்ளார்.

இந்த பயணத்தின் போது ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து அவரை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி விரைவில் எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் மாதங்களில் இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவவிக்கப்படுகின்றது.