November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நீதியின் கூடாரத்தினுள் குள்ளநரிகள் புகுந்துள்ளன”: மீனவர் விவகாரம் தொடர்பில் டக்ளஸ்

நீதிக்காக குரல் கொடுக்கும் கடற்றொழிலாளர்களின் கூடாரத்தில் அநீதியின் குழப்பக் காரர்கள் புகுந்துள்ளனர் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்தியக் கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் ஏனையோர் போன்று பொறுப்பற்ற முறையில் ஏனோ தானோ என்று தன்னால் கதையளக்க முடியாது என்றும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்காமல். நான்கு திட்டங்களை முன்வைத்து உறுதியுடன் செயலாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்ட விரோதத் தொழில்முறைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்ற போராட்டங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

மீனவர் பிரச்சனை தொடர்பில் இந்திய மத்திய, மாநில தலைவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடனும் கலந்துரையாடி வருவதுடன், இராஜதந்திர முறையிலான முன்னெடுப்புகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நீதியான தீர்வு நோக்கிய எமது கடற்றொழிராளiர்களின் குரல் வளைகளை நெரிப்பதுபோல், நீதியின் கூடாரத்தினுள் ஒட்டகங்களும், குள்ளநரிகளும் நுழைந்தன. ஆனாலும், நீதியின் குரலாக நிமிர்ந்த எங்கள் கடற்றொழிலாளர்களின் தீர்வு நோக்கிய பயணத்தை திசை திருப்ப முயன்றவர்கள் தோற்றுப் போனார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.