May 14, 2025 9:06:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் டெங்கு!

இலங்கையில் கடந்த ஒரு வாரத்தில் 925 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 220 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 8,015 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாகவும், இதனால் யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.